Home

பரிசுத்த வேதாகமம்


இந்த உலகத்தில் உள்ள கணக்கிலடங்காத புத்தகங்களில், ஒரு புத்தகத்தை மட்டும் ஈடு இணையற்ற புத்தகம் என்று சொல்ல முடியும் என்றால் அந்தப் புத்தகம் பரிசுத்த வேதாகமம் ஆகும். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் புனிதமாய் போற்றும் வேதம் உண்டு. பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பைபிள்.

பைபிள் என்ற வார்த்தை Bibilia (பிபிலியா) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும். இதன் பொருள் "புத்தகங்கள்" என்பதாகும். தலைசிறந்த புத்தகமாகிய பைபிள் 66 புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் இன்றைக்கு பேசப்படும் ஏறத்தாழ 5000 மொழிகளில் 2009 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமம் கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தின் பயங்கரமும் பரிசுத்தத்தின் மேன்மையும் விளக்கப் பட்டிருக்கிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க தேவன் வகுத்த திட்டத்தை பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது.

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது. காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது. பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம். பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன. பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன. புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன. பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் 66 புஸ்தகங்கள், 1,189 அதிகாரங்கள், 31,101 வசனங்கள் தன்னுள் உள்ளடக்கியுள்ளது.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்

பழைய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்
புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.

Search This Blog